தங்க கருட வாகனத்தில் உற்சவர் பவனி

0
52

சோளிங்கர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நேற்று காலை கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 108 திவ்ய தலங்களில் ஒன்றாக விளங்கும் சோளிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் கருட சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கருடசேவை நேற்று காலை நடந்தது. முன்னதாக, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில் உற்சவர் பக்தோசித பெருமாள் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, மாலையில் நரசிம்மர் ஜெயந்தி நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் பக்தோசித பெருமாள் மாலை 5 மணிக்கு ஊர்க்கோயிலிலிருந்து புறப்பட்டு, பெரிய மலையில் உள்ள மூலவர் சன்னதியை அடைந்தார். அங்கு பிரகலாதனுக்காக நரசிம்மர் அவதரித்த திருக்காட்சி நடைபெற்றது. இதையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் உற்சவர் பக்தோசித பெருமாள் ஊர்க்கோயிலை அடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

*