சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம்

0
36

திருமலை:சித்தூர் மாவட்டம், திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கடந்த 31ம் தேதி கருடர் உருவம் வரையப்பட்ட கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து, தினந்தோறும் காலை, இரவு என்று இரண்டு வேளையும் ஒவ்வொரு வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி எழுந்தருளி நான்கு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். வீதி உலாவில் இந்து தர்ம பிரசார பரிஷத், அன்னமாச்சார்யா திட்டத்தின் சார்பில் பக்தி சங்கீர்த்தனைகள், பஜனை நிகழ்ச்சிகள் நடந்தது.

இந்நிலையில், பிரமோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியையொட்டி காலை 6 மணிக்கு கோயிலில் இருந்து சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி ஊர்வலமாக கபில தீர்த்தத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்குள்ள மண்டபத்தில் சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி உற்சவர்களுக்கு பால், தேன், தயிர், சந்தனம், இளநீர் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

பின்னர் கபில தீர்த்தத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில், பெரிய ஜீயர், சின்ன ஜீயர், துணை செயல் அலுவலர் வரலட்சுமி, பொறியாளர் ஜெகதீஷ்வரரெட்டி உட்பட ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.  மாலை அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரமோற்சவத்திற்கான கொடி இறக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

*