சிம்ம வாகனத்தில் பிரசன்ன வெங்கடேஸ்வரர் பவனி

0
39

திருமலை: அப்பலாயகுண்டா பிரமோற்சவத்தின் 3வது நாளில் சிம்ம வாகனத்தில் பிரசன்ன வெங்கடேஸ்வரர் எழுந்தருளி நான்கு மாடவீதியில் பவனி வந்தார். அப்போது, பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர். திருப்பதி அடுத்த அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கியது.  பிரமோற்சவத்தின் 3வது நாளான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் பிரசன்ன வெங்கடேஸ்வரர் எழுந்தருளி நான்கு மாடவீதியில் உலா வந்தார்.

அப்போது, திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர். வீதி உலாவில் அன்னமாச்சார்யா, இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் பக்தி சங்கீர்த்தனைகள், பஜனை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து மாலை கோயிலில் உள்ள மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது. பின்னர் இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் பிரசன்ன வெங்கடேஸ்வரர் எழுந்தருளி நான்கு மாடவீதியில் உலா வந்தார். இதில், தேவஸ்தான அதிகாரிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

*