திருப்பரங்குன்றம் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நாளை நடக்கிறது

0
7

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விசுவநாதர் கோவிலில் இந்த ஆண்டிற்கான மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நாளை(வெள்ளிக் கிழமை) நடக்கிறது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விசுவநாதர் கோவில் வளாகத்தில் மலைமேல் குமரருக்கு தனி சன்னதி உள்ளது. இதன் வளாகத்தில் கங்கைக்கு நிகரான தீர்த்த குளம் உள்ளது. தெய்வீக புலவர் நக்கீரரின் பாவ விமோசனத்திற்காக முருகப்பெருமான் வேல்கொண்டு மலை பாறையை கீறி இந்த புனித தீர்த்தகுளத்தை உருவாக்கியதாக புராண வரலாறு கூறுகிறது.

இதை நினைவூட்டும்விதமாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை(வெள்ளிக் கிழமை) நடக்கிறது. விழாவில் மதியம் 12 மணிக்கு தங்கவேலுக்கு பால், பன்னீர், இளநீர் உள்பட 16 வகையான அபிஷேகம் நடக்கிறது. பின்னர் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேலை பூப்பல்லக்கில் வைத்து மலைமேல் குமரர் சன்னதிக்கு எடுத்து செல்வார்கள். இதையடுத்து அந்த தங்கவேலுக்கு தீர்த்தகுளத்தில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

*