குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 20-ந்தேதி தொடங்குகிறது

0
4

நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 26-ந்தேதி வரை நடக்கிறது.

நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தினமும் காலையில் யாகசாலை பூஜை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனையும், மாலையில் சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.

25-ந் தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. மறுநாள் (26-ந் தேதி) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சி.என். கிராமத்தில் சுவாமி காட்சி கொடுத்தல் (தபசு காட்சி) நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் சங்கரநாராயணன் மற்றும் திருவாவடுதுறை ஆதீன தென்மண்டல மேலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

*