உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா இன்று தொடங்குகிறது

0
8

உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்குகிறது.

உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு மழை பெய்ய வேண்டி திருவிளக்கு பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு வில்லிசையும், 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெரு வீதி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

நாளை காலை 11 மணிக்கும், இரவு 9 மணிக்கும் வில்லிசை, நண்பகல் மற்றும் நள்ளிரவு 1 மணிக்கு அலங்கார பூஜையுடன் கும்பம் தெரு வீதி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு வாணவேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.

11-ந்தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் பெட்டி ஊர்வலம், காலை 10 மணி மற்றும் இரவு 9 மணிக்கு வில்லிசை, மதியம் மற்றும் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெரு வீதி உலா வருதல், மாலை 3 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், சிறப்பு வழிபாடு நடக்கிறது.

12-ந் தேதி காலை 6 மணிக்கு கொடை விழா நிறைவு பூஜை நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பெருமாள்புரம் ஊர் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

*